உடல் கருகிய நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு.
பளுகல் அருகே வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக இருந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே ஈஞ்சவிளை கோணம் பகுதியை சேர்ந்தவர் நேசமணி மனைவி சாராள்.இவர் வீட் டில் தனியாக வசித்து வந்தார். இவரை கடந்த 7 ம் தேதிக்கு பின்னர் வெளியே காணவில்லை. சாராளின் மகள் மஞ்சு தினசரி செல்போனில் தாயாரிடம் தொடர்பு கொண்டு பேசுவதுவழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக மஞ்சு, தனது தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மஞ்சு நேற்று தாயாரின் வீட் டிற்கு வந்தார்.உள்ளே சென்று பார்த்த போது சாராள் உடல் கருகி இறந்த நிலையில் காணப்பட்டார்.தகவல் அறிந்த பளுகல் போலீசார் விரைந்து வந்து, சாராள் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், அவர் மின்கசிவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும் விசாரணை நடக்கிறது.