துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு
ஆரணியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Update: 2024-04-05 07:10 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆரணி நகராட்சி சார்பில் ஆணையாளர் ஏ.சரவணன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எஸ். பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்போது அரசு அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.