என் வாக்கு - என் உரிமை சுவரொட்டி போட்டி

வாக்காளர் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் “என் வாக்கு - என் உரிமை” என்ற தலைப்பில் சுவரொட்டி போட்டி நடைபெற்றது.

Update: 2023-10-19 15:50 GMT

“என் வாக்கு - என் உரிமை”

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் “என் வாக்கு - என் உரிமை” என்ற தலைப்பில் சுவரொட்டி போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு வாக்காளரும், வாக்களிப்பதின் அவசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர். “18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விலைமதிக்க முடியாத தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும்” மக்களாட்சியில் மக்களுக்கு இருக்கும் ஒரே அதிகாரம் தவறாமல் வாக்களித்தல் தான்”;. “நல்ல ஜனநாயகம் அமைய நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்”. “5 ஆண்டு கால ஆட்சிக்கு நாம் கட்டாயமாக நம் வாக்கினை செலுத்த வேண்டும்”. “ஒரு வாக்கின் வலிமை” போன்ற தலைப்புகளில் மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டியினை தயார் செய்திருந்தனர். இதில் முதலாம் ஆண்டு இளநிலை கணினி அறிவியல் செயற்கை நுண்ணறிவுத் துறை பாடப்பிரிவு மாணவி டி.கோபிகா ஸ்ரீ முதல் பரிசினையும், மூன்றாம் ஆண்டு பி.காம் பாடப்பிரிவு மாணவி வீ.கீதா இரண்டாம் பரிசினையும், மூன்றாம் ஆண்டு இளநிலை தமிழ்ப் பாடப்பிரிவு மாணவி டி.சரண்யா மூன்றாம் பரிசினையும் பெற்றனர். வெற்றி பெற்ற மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கு பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் கே.நல்லுசாமி, செயலர். எஸ்.செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம்.ஆர்.லட்சுமிநாராயணன், நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார், துறைத் தலைவர்கள் ஆர்.நவமணி, எம்.சசிகலா, ஆர்.சாவித்திரி ஆகியோர் பாராட்டினர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஏ.அனிதா செய்திருந்தார்.

Tags:    

Similar News