தென்காசியில் கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசியில் கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Update: 2024-04-09 17:18 GMT
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிக ளுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவி அபிதா பெல்சியா மற்றும் மாணவி பேச்சியம்மாள் ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு இன்று தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர்-மங்களாபுரம் ருக்குமணி கல்வியல் கல்லூரி, சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவ் அரசு மற்றும் கலை கல்லூரி, ஆகிய கல்லூரிகளிலுள்ள மாணவ, மாணவிகளுக்கான தேர்தல் விழிப்பணர்வு நடைபெற்றது. ஜனநாயகம் கண்ணியத்துடன் வாக்களியுங்கள், 100% நேர்மையாக வாக்களிப்போம், இந்த மை நமது தேசத்தின் வலிமை, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை, 100% ஒட்டு இந்தியர்களின் பெருமை, நமது இலக்கு100% வாக்குப் பதிவு, வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அவர்களிடையே விளக்கிக் கூறப்பட்டன. மேலும் முதல் வாக்காளர்க ளுக்கு தேர்தல் பற்றி விளக்கிக் கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் 100% வாக்களிப் போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.