தேர்தல் விழிப்புணர்வு பேரணி!
பொன்னமராவதியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Update: 2024-03-26 06:24 GMT
பொன்னமராவதியில் வருவாய்த்துறை சார்பில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தாசில்தார் சாந்தா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தேர்தல் துணைத் தாசில்தார் சேகர், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் ஓட்டுப்போட வேண்டும், வாக்களிப்பது நமது ஜனநாயக் கடமை, சிவகங்கை லோக்சபா தொகுதியில் 100 சதவீதம் ஓட்டு பதிவாக வேண்டும், கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணி பொன்னமராவதி காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு அண்ணாசாலை, பஸ் நிலையம், போலீஸ் ஸ்டேஷன் வழியாக நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.டிஎஸ்ஒ திலகவதி, வருவாய் ஆய்வாளர்கள் அங்குலட்சுமி, சுரேஷ்குமார், பிருந்தா, விஏஓ பாண்டியன், பச்சையப் பன்,ரமேஷ், சண்முகசுந்தரம் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.