மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி 

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-29 12:56 GMT

மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி 

தஞ்சாவூர், அருங்காட்சியகம் வளாகத்தில் இருந்து, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை என்னும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு மூன்று சக்கர வாகன பேரணியினை, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மூன்று சக்கர வாகனப் பேரணியினை அருங்காட்சியகம் வளாகத்தில் இருந்து, மருத்துவக் கல்லூரி சாலை வழியாக, அன்னை சத்தியா விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.

ஒருவிரல் புரட்சி, நமது வாக்கு நமது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, விரலுக்கு மையிட்டு விதியை மாற்றுவோம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கி பேரணியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுபிரியா மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News