பரமத்தி வேலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
பரமத்தி வேலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம், மக்களவை பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும்,
பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி, கோலப்போட்டி, செல்ஃபி ஸ்டெண்ட் அமைத்தல், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், துண்டு பிரசுரங்கள் விநியோகம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல், முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில்,
கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம், வேலூர் பஸ் நிலையத்தில் நேற்று மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்” என்ற தலைப்பில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேரூராட்சி தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.