போஸ்டர் அடித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல் அருகே கோயில் திருவிழா நிறுத்தத்திற்கு காரணமானவர்களை கண்டித்து பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.;
Update: 2024-04-01 07:09 GMT
புறக்கணிப்பு போராட்டம்
திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் கோயில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்று ஊர் பொதுமக்கள் அடித்துள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சிங்கார கோட்டை அருகே எஸ்.பாறைப்பட்டியில் காளியம்மன் விநாயகர் கருப்பண்ணசாமி மற்றும் முனியாண்டி கோவில் திருவிழா கடந்த 29ஆம் தேதி ஆரம்பித்து இரண்டாம் தேதி நடத்த இருந்ததை அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்களான கருணாநிதி தனபால் முருகன் ஆகியோரின் தூண்டுதலால் திருவிழா நிறுத்தப்பட்டதால் ஊர் பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.