கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம்

கள்ளகுறிச்சியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நகர செயலாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-08 06:41 GMT

பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக, கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். நகர செயலாளர் பாபு தலைமையில் கோட்டைமேடு, கருணாபுரம், சுந்தர விநாயகர் கோவில் தெரு உட்பட பல்வேறு இடங்களில் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர்.

மேலும் கமலா நேரு தெரு, புதுவீடு சந்து, கவரை தெரு, பெருமாள் கோவில் தெரு, சித்தேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க., ஆட்சியில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தனர். மேலும், சுமை துாக்கும் தொழிலார் நல சங்கம், நகை செய்யும் தொழிலாளர்கள் சங்கம், ஒற்றை மாட்டு வண்டி நல சங்கம், பெயிண்டர் சங்கம், எலக்ட்ரீஷியன் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு கோரினர்.

Tags:    

Similar News