தேர்தல் பத்திரம் செல்லாது: அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு

தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்தது வரவேற்கதக்கது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Update: 2024-02-16 11:53 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 514 நபர்களுக்கு ரூபாய் மூன்று கோடியே 24 லட்சம் மதிப்பிலான அரசின் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்பொழுது பேசிய அமைச்சர், அரசின் திட்டங்கள் மக்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக சென்றடையும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் திட்டங்கள் தொடர்ச்சியாக பல பகுதிகளில் நிறைவேற்றப்பட்டு வருவதால் தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உயர்ந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதால் தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்சநீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது வரவேற்கதக்கது . இதனை பலர் தவறாக பயன்படுத்தினார்கள் . காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் , போதிய நிதி ஒதுக்காமல் டெண்டரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் நாங்கள் அந்தத் திட்டத்திற்கு தற்போது நிதியை ஒதுக்கி அந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

திருவண்ணாமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வேனுகோபால், அவர் மறைவு என்பது வேதனையளிக்கிறது. தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக எந்த குற்றச்சாட்டிற்கும் ஆளாகாதவர் . எல்லா தரப்பினருக்கும் நல்லவர் அவர் மறைவு கட்சிக்கு பேரிழப்பு என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Tags:    

Similar News