தேர்தல் நடத்தை விதிமுறைகள் - தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை !

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் வாகன சோதனையில் 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-29 05:33 GMT

குட்கா பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி, திருநீர்மலை பிரதான சாலையில் நேற்று காலை, கூடுவாஞ்சேரி நகராட்சி சுகாதார அலுவலர் நாகராஜ் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டி.வி.எஸ்., ஜூபிட்டர் வாகனத்தில் வந்தவரை மடக்கி சோதனை நடத்தினர். அதில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரஷித் அகமது, 40, என்பதும், வாகனத்தில், அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும் தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி, பல்லாவரம் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்ய குட்கா பொருட்களின் மதிப்பு, 3 லட்சம் ரூபாய் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று மதியம் வந்த 'பினாகினி' விரைவு ரயில் பயணியரிடம் சோதனை நடத்தினர். ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் பையில், 4.40 லட்சம் ரூபாயும், ஹரிபாபு என்பவரிடம் 2.65 லட்சம் ரூபாயும் சிக்கியது ஓட்டேரி, மேட்டுப்பாளையம் ஸ்டீபன்சன் சாலையில், நேற்று பெரம்பூரைச் சேர்ந்த ஹரிஷ்குமார் ஓட்டி வந்த ஸ்கூட்டரை சோதனை செய்தனர். இதில் 5 லட்சம் ரூபாய் சிக்கியது. ஆவணம் இல்லாததால் பெரம்பூர் புரசைவாக்கம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், சவுகார்பேட்டையில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ், வங்கியில் பணத்தை செலுத்த எடுத்து சென்றது தெரியவந்தது.
Tags:    

Similar News