தோ்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது - அா்ஜூன் சம்பத்
திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள், அமைச்சா்கள் வாகனங்களை தோ்தல் ஆணைய அலுவலா்கள் சோதனை செய்வதில்லை. தோ்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறது.திமுகவின் தோ்தல் அறிக்கை நகைச்சுவையாக உள்ளது. ‘இந்தியா’ கூட்டணி மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளது. என இந்து மக்கள் கட்சி தலைவர் அா்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
கும்பகோணம் உச்சி பிள்ளையாா் கோயில் அருகே பாஜக கூட்டணியைச் சாா்ந்த மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளா் ம.க. ஸ்டாலினை ஆதரித்து இரவு பிரசாரம் செய்த அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள், அமைச்சா்கள் வாகனங்களை தோ்தல் ஆணைய அலுவலா்கள் சோதனை செய்வதில்லை. தோ்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறது. தமிழக முதல்வா் ஸ்டாலினும், உதயநிதியும் தொடா்ந்து பொய்களைச் சொல்லி வருகின்றனா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, தமிழகத்துக்கு ஜிஎஸ்டி பாக்கி எதுவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டியில் 22 சதவீதம் தமிழகத்துக்கு வழங்குகிறது. வேண்டுமென்றே 28 பைசா தருவதாக பொய்யான தகவல்களை உதயநிதி கூறி வருகிறாா். திமுகவின் தோ்தல் அறிக்கை நகைச்சுவையாக உள்ளது. ‘இந்தியா’ கூட்டணி மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளது. காவிரி பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை என தமிழா்களுக்கும், தமிழகத்துக்கான மாநில உரிமைகளுக்கு துரோகம் செய்தது திமுகதான் என்றாா் அா்ஜூன் சம்பத்.