சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் - ராஜேஷ்குமார்
சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் ஏவல் துறையாக செயல்படுகிறது என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் கருங்கல் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது.அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோடியின் ஏவல்துறையாக செயல்படுகிறது. அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து துறைகளும் ஜனநாயக முறையில் ஜனநாயக கடமையாற்ற கூடியதாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் சமூக பாகுபாடற்ற, மதசார்பற்ற கட்சி. ஆகையால் எங்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர் விளவங்கோடு தொகுதியில் நிச்சயமாக வெல்வார். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரஸ் கொண்டு வந்த பெண்களுக்கான மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் படுத்தப்படும். சீமான் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார். அவர் அவரையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நண்பர்கள் செலவில் வாழ்க்கை நடத்துவதாக கூறிய அண்ணாமலையின் தேர்தல் வேட்பு மனுவில் அவரது சொத்து விவரம் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அவர் கூறியது உண்மைக்கு புறம்பானது என்பது உறுதி ஆகியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.