தேர்தல் புகார் அளிக்க புகார் எண்கள் அறிவிப்பு
பாராளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிவிப்பு 16.03.24-ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்திடும் பொருட்டு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ அல்லது ஒலி (Text Message, Image or Video) ஒளி வெளியிடுபவர்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக சம்மந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்கள் அல்லது சம்மந்தப்பட்ட நபர்கள் புகார் அளிப்பதற்கென்றே பிரத்யேகமாக தேனி மாவட்ட காவல் துறையால் புதிதாக தொலைபேசி எண்கள் (04546-261730 மற்றும் அலைபேசி எண்: 9363873078) அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே உண்மைக்கு புறம்பான செய்தியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களோ அல்லது சம்மந்தப்பட்ட நபர்களோ மேற்கண்ட தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களில் புகார் அளிக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத், தெரிவித்துள்ளார்கள்.