தேர்தல் கட்டுப்பாட்டு அறை; 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, தேர்தல் அத்துமீறல் குறித்த புகாரை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-03-27 11:54 GMT

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, தேர்தல் அத்துமீறல் குறித்த புகாரை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம், தகவல்.....

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024-க்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் மார்ச் - 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரப்பெற்றதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்தகட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 மற்றும் 299255 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News