தேர்தல் பறக்கும் படை சோதனை: சேலம் ஆட்சியர் ஆய்வு

தேர்தல் பறக்கும் படை சோதனையை சேலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.;

Update: 2024-03-18 10:44 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

சேலம் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கார், வேன், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் சோதனை நடத்தி பணம், பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா? என்று மரவேனரி, அய்யந்திருமாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். சேலம் மரவனேரி பகுதியில் நடந்த சோதனையை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

Advertisement

அப்போது அவர் கூறியதாவது:- தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை கண்காணிக்கவும், மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 1 வீடியோ பார்வை குழு, 1 வீடியோ கண்காணிப்பு குழு, 1 கணக்கு சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளன. சேலம் மரவனேரி பகுதியில் பறக்கும் படை கண்காணிப்பு பணிகள் ஆய்வு நடத்தப்பட்டன.

அதன்படி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News