வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொதுப்பார்வையாளர் ஆய்வு

செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-13 09:36 GMT

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு 

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா, இ.ஆ.ப., மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., , காவல் பொது பார்வையாளர் விவேக் ஷியாம், இ.கா.ப., ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனப்பிரியா, காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன், வருவாய் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், அருண்பிரசாத் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News