வழக்கறிஞா்கள் சங்க தோ்தலில் புதிய நிா்வாகிகள் தோ்வு!
தூத்துக்குடியில் வழக்கறிஞா்கள் சங்கத் தோ்தலில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-03 05:49 GMT
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வழக்கறிஞா் சங்க 2024-25ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. 708 வாக்காளா்களில் 646 போ் வாக்களித்தனர். இதில், புதிய தலைவராக தனசேகா் டேவிட் தோ்வு செய்யப்பட்டாா். செயலராக செல்வின், துணைத் தலைவராக தெய்வ தொல்காப்பியன், இணைச் செயலராக ஜஸ்டின், பொருளாளராக வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர்களாக சாா்லஸ், காா்த்திகேயன், முருகன், ரமேஷ் செல்வகுமாா், செண்பகராஜ், ஸ்ரீநாத், ஆனந்த், விக்னேஷ், நான்சி, சோபனா ஜெனிபா், தமிழ்ச்செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனர். தோ்தல் அதிகாரிகளாக சந்தனகுமாா், பிள்ளை விநாயகம் ஆகியோா் செயல்பட்டனர்.