வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Update: 2023-12-28 02:24 GMT
திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023-2025ம் ஆண்டு சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் நடந்தது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவராக ஆதி.சரவணனும், செயலாளராக பாஸ்கர், பொருளாளராக ரம்ஜான், மாவட்ட துணைத்தலைவர்களாக மகேஷ் மற்றும் ஆனந்த், இணை செயலாளர்களாக அருண்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்கத்தின் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.