பாஜகவின் வளர்ச்சியை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் வைகோ துரை!

பாஜகவின் வளர்ச்சியை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் வைகோ துரை தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-22 09:12 GMT
பாஜகவின் வளர்ச்சியை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் வைகோ துரை!

துரை வைகோ

  • whatsapp icon
பாஜகவில் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர், அவர்கள் பெறப்போகும் வாக்குகள் அக்கட்சியின் வளர்ச்சியைக் காட்டும் என்றார் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான துரை வைகோ. புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மதிமுகவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. முதல்வரை நேரில் சந்தித்தும் தலைவர் வைகோ வலியுறுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு தற்போது நிதி வழங்கப்படுவது சரியானதுதான். எல்லோருக்கும் தாராளமாக வழங்கும் அளவுக்கு மாநில அரசின் நிதிநிலை திருப்தியாக இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கோவையில் போட்டியிடுகிறார். எனவே, தேர்தல் முடிவுகள் அக்கட்சி எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதைகாட்டும் என்றார் துரை வைகோ.
Tags:    

Similar News