எஸ் பி அலுவலகத்தில் தேர்தல் சிறப்பு கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் எஸ் பி அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-03-18 05:38 GMT
பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தினை பாதுகாப்பான முறையில் வாக்கு சாவடிக்கு எடுத்து செல்வது குறித்தும், வாக்கு பதிவு நடைபெறும் நாள் அன்று சிறப்பான பாதுகாப்பு வழங்குவது குறித்தும் எஸ் பி அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.