வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் - 1080 மனுக்கள் குவிந்தன
Update: 2023-11-26 07:25 GMT
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், நேற்று சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற்றது. கெங்கவல்லி தாலுகாவில் 494 மனுக்கள், தலைவாசல் தாலுகாவில் 586 மனுக்கள் என மொத்தம் 1080 மனுக்களை பெயர் நீக்கம், சேர்ப்பு, மற்றும் திருத்தம் கோரி பொதுமக்கள் வழங்கினர். முகாமினை தாசில்தார்கள் பாலாஜி, பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.