எலக்ட்ரிக் டூவீலரில் சென்றவர் மீது சரக்கு வாகன மோதி விபத்து
கரூர் மாவட்டம்,நடையனூர் அருகே எலக்ட்ரிக் டூவீலரில் சென்றவர் மீது சரக்கு வாகன மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், நடையனூர் அருகே உள்ள திருக்காடுதுறை, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் வயது 30. இவர் மே 11ஆம் தேதி மாலை 5 மணி அளவில், கரூர் - சேலம் சாலையில் அவரது எலக்ட்ரிக் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் செம்மடை ஏபிடி மாருதி கம்பெனி அருகே வந்தபோது, அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த, தர்மபுரி மாவட்டம், தாளியாப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் வயது 47 என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் வாகனம், சிவகுமார் ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக் டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிவக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு,தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அட்சயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த சிவகுமாரின் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.