மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-04-07 11:02 GMT
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அய்யர் விளையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் அரிகிருஷ்ணன் (47). எலக்ட்ரீசியன் ஆன இவர் தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள ஒரு கடையில் டியூப் லைட் பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அரிகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.