மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

சின்னசேலம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த எலக்ட்ரீஷியன் சிகிச்சை பலனின்றி பலியனார்.

Update: 2024-04-12 07:35 GMT

பலி

சின்னசேலம் அடுத்த அம்மகளத்துாரைச் சேர்ந்தவர் மணி, 45; எலக்ட்ரீஷியன். இவர் கடந்த மார்ச் 25ம் தேதி காலை 7:30 மணிக்கு அம்மகளத்துார் சாலையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் பழுதினை சரி செய்தார்.

அப்போது, மின்சாரம் தாக்கியதில் மணி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று அதிகாலை 3:30 மணியளவில் மணி இறந்தார். புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News