வந்தவாசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன

வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்டது‌.

Update: 2024-03-27 08:36 GMT

எந்திரங்கள் வைத்து சீல் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் 364 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.வரும் 19-ந் தேதி வாக்காளர்கள் வாக்களிக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தவாசி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தேர்தல் அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.அறை முன்பு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News