தளி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
கிருஷ்ணகிரி : தளி அருகேயுள்ள நெல்லுமார் கிராமத்தில் காட்டுயானை தாக்கி ஓருவர் உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-20 09:18 GMT
யானை தாக்கி இறந்த விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே தமிழக எல்லைப் பகுதியான நெல்லுமார் கிராமத்தில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தளி போலீசார் மற்றும் ஜவளகிரி வனத்துறையினர் இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டுயானையை விரட்டக் கோரி அவரது உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.