அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்..... அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கு தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணியிடத்திற்கு 06.02.2024 தேதிக்குள் www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையவழித் தேர்வு 17.03.2024 அன்று முதல் நடத்தப்படும். விண்ணப்பத்தாரர்கள் 02.01.2004 முதல் 02.07.2007 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். +2 அல்லது அதற்கு சமமாக கல்வித்தகுதியில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளோமோ பட்டம் பெற்றவர் தகுதியடையவராவர். உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய மூன்று நிலைகளை உடையது. தேர்வு செய்யப்படுபவர்கள நான்கு ஆண்டுகளுக்கு பணியமர்த்தம் செய்யப்படுவர். மாத ஊதியமாகரூ.30,000 ரூ.33,000/-ரூ.36,500/- மற்றும் ரூ.40,000/- என்ற அளவில் முதல் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை வழங்கப்படும்.
நான்காண்டு பணிமுடித்த பின்னர் ரூ.10.04 இலட்சம் சேவா நிதியிலிருந்து வழங்கப்படும் விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் RRB-யில் அசிஸ்டன் லோகோ பைலட் 5696 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20.01.2024 முதல் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் 19,900/- ஆகும். 19.02.2024 வரை 18-முதல் 30 வயதுடைய Diploma Engineering கல்விதகுதி உடைய வேலைநாடுநர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
www.rrbcdg.gov.in/ என்ற இணையதள பக்கத்தை மேலும் விவரங்களுக்கு பார்க்கவும். இந்த அரிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்ட ஆண்/பெண் வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளார்.