எல்லை முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் எல்லை முனியப் பன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
Update: 2024-01-22 09:28 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் எல்லை முனியப் பன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வீரகனூர் பேரூராட்சி தெற்குமேடு பொன்னி மேடு பகுதியில் அமைந்துள்ள எல்லை முனியப்பன்கோயிலில், கடந்த 19ம் தேதி கணபதிஹோமம் விழா தொடங்கப்பட்டது. நான்கயாககால பூஜையில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்களுடன் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. விழா குழுவினர் சார்பில் அன்னதான பிரசாதமாக வழங்கப்பட்டது விழா வையொட்டி, வீரகனூர் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.