எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டுமான பணி

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டுமான பணியை விழுப்புரம் கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

Update: 2024-05-15 09:14 GMT

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டுமான பணியை விழுப்புரம் கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கிடையே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949-1950-ம் ஆண்டு எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப் பட்டது. இந்த அணைக்கட்டின் வலது புறம் உள்ள எரளுர், ரெட்டி ஆகிய இரு பிரதான கால் வாய்கள் மூலம் 12 ஏரிகளும், இடது புறம் உள்ள ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம் பாக்கம் ஆகிய கால்வாய்கள் மூலம் 14 ஏரிகளும் நிரம்பி இதன் மூலம் 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைக்கட்டு சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது. இதையடுத்து சேதமடைந்த அணைக்கட்டை சீரமைக்க 2023 2024-ம் ஆண்டு ரூ.864 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் கொங்கராயனூர் முதல் பையூர் காலனி வரை ரூ.3.94 கோடியில் 4.420 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக சாலை அமைக்கும் பணியியை பார்வையிட்ட அவர் இப்பகுதியில் ரூ.20 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News