மழைநீர் வடிகால்வாய் இணைப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்

கால்வாய் முழுமை பெறாததால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

Update: 2024-02-23 05:04 GMT

மழைநீர் வடிகால்வாய் இணைப்பு 

காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில், சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மேற்கு பகுதியான செல்லம்மா நகர் அருகில், சாலையோரத்தில் கால்வாய் கட்டுமானப் பணிக்கு பழமையான புளியமரம் இடையூறாக உள்ளதால் கால்வாய்க்கு நான்கு மீட்டர் நீளத்திற்கு இணைப்பு ஏற்படுத்தப்படாமல் கட்டுமானப் பணி விடப்பட்டுள்ளது. இதனால், கால்வாய் முழுமை பெறாததால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, விடுபட்ட பணியை விரைந்து முடித்து கால்வாய்க்கு இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம்நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் விஜய் கூறியதாவது: உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை சாலை சந்திப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.அப்போது, செல்லம்மா நகர் பகுதியில் விடுபட்ட பகுதியில், கால்வாய்க்கு இணைப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானப் பணி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News