மீண்டும் வேலை வழங்க கோரி ஊழியர்கள் போராட்டம்

மீண்டும் வேலை வழங்கக்கோரி தாய்லாந்து நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் நுழைவு வாயிலில் ஊழியர்கள் போராட்டம்

Update: 2024-03-31 17:36 GMT

போராட்டம்

வேலூர் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி அருகே தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டது. அங்கு 2009-ம் ஆண்டு முதல் மின்சாரம் மூலம் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யும் பணி தொடங்கின. அங்கு, கொரோனா பரவலுக்கு பின் ஊழியர்களுக்கு சரியாக வேலை கொடுக்கவில்லை. எனினும், 1½ ஆண்டாக ஊழியர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் கார்டன் பராமரிப்பு, எந்திரங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதேபோல் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி 1½ ஆண்டாக நிறுத்தப்பட்டன. வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் நிறுவனம் திடீெரன மூடப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுவனம் இழுத்து மூடப்பட்டதால், ஊழியர்களுக்கு சராசரியாக ரூ.3.50 லட்சம் செட்டில்மென்ட் தொகையை ஊழியர்களின் வங்கி கணக்கில் நிர்வாகம் செலுத்தி உள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், நிறுவன அதிகாரிகள் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாமலேயே வேலை பார்த்ததற்காக ரூ.3.50 லட்சத்தை செலுத்தி உள்ளனர். இருப்பினும், நிறுவனம் எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து நுழைவு வாயிலில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் எங்கள் நிறுவனம் திவாலாகி விட்டது. எங்களால் ஊழியர்களுக்கு வேலை வழங்க முடியாது, என தனியார் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News