தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன குறைதீர் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் குறைதீர் கூட்டம் வரும் 12-ந் தேதி நடக்கிறது.;

Update: 2024-02-08 06:19 GMT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 

சேலம் தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் வருகிற 12-ந் தேதி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமையிலும், ஈரோட்டில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் வீரேஷ் தலைமையிலும் ‘நிதி ஆப்கே நிகட்’ என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

அன்றைய தினம் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன் தங்களது பெயர், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.எண். நம்பர், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) அந்தந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News