மயிலாடுதுறை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: பணிநியமன ஆணை வழங்கல்

மயிலாடுதுறை ஏ ஆர் சி கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2024-04-13 15:25 GMT

பணி நியமன ஆணை வழங்கல்

மயிலாடுதுறை.ஏ.ஆர்.சி விசுவநாதன் கல்லூரியின் வேலைவாயப்பு குழுமம் நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா இனிதே நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை,

முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வீதி முத்துக்கணியன் பங்கேற்றார். கல்லூரி மேலாண்மைக்குழு மூத்த பிரதிநிதி ராஜா தங்கவேல் முன்னிலை வகித்து, சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். சிறப்புரையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த கருத்துகளை வழங்கினார்.

Advertisement

தடைகளை உடைத்தல் வேண்டும், வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய ஆசைகளை உருவாக்கி கொள்ள வேண்டும். பழக்க வழக்கங்களைக சீரமைத்துக்கொள்ள வேண்டும். போன்ற வாழ்க்கை நெறிமுறைகளை மாணவர்களிடையே எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில் முன்னதாக கல்லுாரியின் முதல்வர். முனைவர். நி. சத்தியபாமர் வரவேற்புரை வழங்கினார்.

விழாவின் இறுதியில் வேலைவாய்ப்பு குழுமம், பொறுப்பாசிரியை பேராசிரியர் நந்தினி நன்றி கூறினார்.

Tags:    

Similar News