பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் சார்பில் தொழில் முறை வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் . ஜானி டாம் வர்கீஸ், தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-23 15:49 GMT

கருத்தரங்கம் 

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் சார்பில் தொழில் முறை வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் . ஜானி டாம் வர்கீஸ், தொடங்கி வைத்தார்.

  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, அரசு துறையிலுள்ள பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்திடத் தேவையான 4000-க்கும் மேற்ப்பட்ட போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், மாதாந்திர போட்டி தேர்வுகளுக்கான இதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் அடங்கிய நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.சி குரூப் II&2A தேர்வில் இத்தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற 13 வேலைநாடும் இளைஞர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனார். மேலும் டி.என்.யூ.எஸ்.ஆர்.பி(பி.சி) சார்பில் நடத்தப்பட்ட காவலர் தேர்வில் 5 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.

தற்சமயம், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒருங்கிணைந்த டி.என்.பி.சி குரூப் -II& 2A மற்றும் குருப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகப்பட்டினத்தில் நேரடியாக நடைபெறும்.

இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாதவர்கள், அரசுப்பணிக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் முற்பகல் 2.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலும் ஊக்க உரைகள்,

முந்தைய ஆண்டுகளில் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், தினசரிTN Career Services Enaloyment steam youtube Channel செய்யப்பட்டு வருகிறது.

கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைத்து போட்டியாளர்களும் பயனடையும் வகையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் "மெய்நிகா சுற்றல்" (Virtual Learning) என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது இதில் மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், மாதிரித்தேர்வுக்கான வினாவங்கிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டி जंगलकंल, क्रो मला भलشمس غ https://tamilhaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கைபேசி செயலி வாயிலாகவே போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யலாம். என தெரிவித்தார். இக்கண்காட்சியில் பல்வகை போட்டித் தேர்வுகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் சட்கள் தங்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் வேலைவாய்ப்புகள், போட்டி தேர்வுகள் குறித்தும் அத்தேர்வுகளுக்கான பயிற்சி குறித்தும், மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான வழிமுறைகள் வங்கிக்கடனுதவிகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.செந்தில்குமார், சர் ஐசக் நியூட்டன் கல்லூரி தாளாளர் திரு.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News