சுரண்டை அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்புக் கருத்தரங்கு கூட்டம்
சுரண்டை அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 14:30 GMT
கருத்தரங்கில் பகேற்றவர்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா்.
பணிவாய்ப்பு அலுவலா்கள் நே. ஜான் ஜோசப், அ. பிரான்சிஸ் ஆபிரகாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனா் ஏ. ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
அரசுப் பணிகள், வேலைவாய்ப்பு குறித்து பல்துறை வல்லுநா்கள் பி.வி. ராமன், டி. ரமேஷ், எஸ். முத்துக்குமாா், கே. காருண்யா குணவதி ஆகியோா் மாணவா்களுக்கு கருத்துரை வழங்கினா். கணிதத் துறை இணைப் பேராசிரியா் ரா. வீரபத்திரன் வரவேற்றாா். கல்லூரியின் பணிவாய்ப்பு இயக்குநா் சு. சிவசங்கரன் நன்றி கூறினாா்.