காலி மதுபாட்டில் பெறும் திட்டம் துவக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 50 டாஸ்மாக் கடைகளில் மது அருந்துவோர்களிடம் இருந்து காலி மதுபான பாட்டில்களை பெறும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-21 05:41 GMT

பைல் படம் 

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கி அருந்துவோர்கள் மதுபாட்டில்களை ஆங்காங்கே விட்டு செல்வார்கள். இதனால் நடந்து செல்வோர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் காலி மதுபாட்டில்களை நீர்நிலைகள், வயல்வெளிகளில் வீசி செல்வார்கள். இவ்வாறு வீசி செல்வதால் பாதிப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான காலிப்பாட்டில்களையும்,நாகப்பட்டினம் மாவட் டத்தில் உள்ள 50 டாஸ் மாக் கடைகளில் மது அருந்துவோர்களிடம் இருந்து காலி மதுபான பாட்டில்களை பெறும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட் டுள்ளது என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார்.விற்பனை செய்யும் கடையின் எண் பாட்டில் மேல் சீல் வைக்கப்பட்டு அந்தக் கடையில் அந்த பாட்டில்  ரூ 10 க்கு பெறப்படுகிறது
Tags:    

Similar News