அன்னவாசலில் இடம் ஆக்கிரமிப்பு: தாசில்தார் அதிரடி

அன்னவாசல் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பை தாசில்தார் மீட்டார்.;

Update: 2024-02-09 09:47 GMT

நிலத்தை மீட்கும் அதிகாரிகள்

அன்னவாசல்- புதுக்கோட்டை சாலை தனியார் எரிவாயு விற்பனை நிலையம் எதிரே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுமார் 2000 சதுர அடி கொண்ட காலி இடம் உள்ளது. இந்த இடம் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பு கொண்டதாகும். இந்த நிலையில், தனியார் ஒருவர் காலி இடத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார்.

இதை தொடர்ந்து, அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டு அரசு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யாவுக்கு கிடைத்த புகாரை அடுத்து இடத்தை ஆய்வு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலுப்பூர் வட்டாட்சியர் சூரியபிரபுக்கு உத்தரவிட்டார்.

Advertisement

இதை தொடர்ந்து அந்த இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியர் ஆக்கிரமிப்பாளரை அழைத்து பேசி அரசுக்கு சொந்தமான இடம் இது என்றும் உடனடியாக அகற்றி கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு பணியாட்களை வரவழைத்து இடத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலிகற்களை அப்புறப்படுத்தினர்.

தனியார் வசம் இருந்த இடத்தை கட்டுப்பாட்டுக்கு வந்தார். ஆக்கிரமிப்பை அரசு கொண்டு உடனடியாக அகற்றி அதிரடிகாட்டிய தாசில்தார் சூரியபிரபுவின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

Tags:    

Similar News