ஆங்கில இலக்கிய மன்றம் துவக்க விழா

கள்ளகுறிச்சி மாவட்டம், கனியாமூர் டிஎஸ்எம் கல்வியியல் கல்லுாரியில் நடைபெற்ற ஆங்கில மன்ற துவக்க விழாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-26 11:04 GMT

துவக்க விழா

கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் ஆங்கில இலக்கிய மன்றம் துவக்க விழா நடந்தது. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஆசிரிய மாணவி ரிதன்யா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லுாரி ஆங்கில துறைத்தலைவர் முருகானந்தன் பங்கேற்று பேசியதாவது: தற்போதைய சூழலில் ஆங்கிலமொழி முக்கியமானதாகும். எனவே, ஆசிரிய மாணவர்களான நீங்கள் அனைவரும் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசினால் மட்டுமே, உங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் என பேசினார். தொடர்ந்து, ஆங்கில இலக்கிய மன்றம் துவக்கப்பட்டு, பேச்சு, நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ராமு, பேராசிரியர்கள் தேவி, பிரபாகரன், சிவராமன், அண்ணா கலியன், அர்ச்சனா, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரிய மாணவர் விஜய் நன்றி கூறினார்.

Tags:    

Similar News