கடைமடை வரை தடையின்றி தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்

தென்பெரம்பூர் ஊராட்சியில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தனர்.

Update: 2024-02-09 15:44 GMT
நீர்வளத்துறை செயலர் ஆய்வு

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் வெண்ணாறு வெட்டாறு நீர்  ஒழுங்கு தலைப்பில், மேட்டூர் அணையில் இருந்து, முதலமைச்சர் ஆணையின்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டு, வந்துள்ள நீரின் வரத்து குறித்து, தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் ஊராட்சியில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தண்ணீர் முறையாக கடைமடை வரை சென்று சேரவும், திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவும், விவசாயிகள் பயன்பெறவும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

பின்னர், தஞ்சாவூர் ஒன்றியம் சமுத்திரம் ஏரியில் அமைக்கப்பட்டு வருகிற பூங்காவின் மேம்பாட்டு பணிகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் இளங்கோ, திலீபன், 

அய்யம்பெருமாள், உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார், சங்கர், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News