புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கொடி அசைத்து துவங்கி வைத்தார்

Update: 2023-12-31 01:42 GMT

புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூர் முதல் பெங்களூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் நடைபெற்ற விழாவில் துவக்கி வைத்தார். கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் வழியாக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அதனை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில் , ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம் தலைமையிலான நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மலர் தூவி வரவேற்று மகிழ்வினை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலினை சட்டமன்ற உறுப்பினர் பச்சைக்கொடி அசைத்து ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் துவக்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது பெங்களூர் புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News