விழுப்புரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது.
மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை, விழுப்புரம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகி யவை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல் வாகன கலை நிகழ்ச்சி பிரசாரங்களுடன் விழுப்புரத்தில் நடைபெற்றது. இப்பிரசாரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார்.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உத வியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், சுற்றுச்சூழல் ஒருங்கி ணைப்பாளர் நாகமுத்து, முதல்-அமைச்சரின் பசுமை தோழர் பவித்ரா, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், பாலசுப்பிரமணியன், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்கள், தொண்டு நிறுவன கலைக்குழுவினர் கலந்துகொண்டு பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்க ளுக்கு பாரம்பரிய கிராமிய ஒயிலாட்டம், கரகம், பறையாட்டம், வீதி நாடகம் மூலமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், பல்லுயிர் பெருக்கம், மண்வளம், இயற்கை வளம் காத்தல் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றி லும் தவிர்க்க பாரம்பரிய சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், வாழை இலை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.