சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-03-22 10:21 GMT

தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


தஞ்சை, மருதுபாண்டியர் கல்லூரியில், மாவட்ட அளவிலான சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்  மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர்  ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ், ஆராய்ச்சி புலத்தலைவர் கோ.அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக எம்.ஆர். மருத்துவமனை மருத்துவர் ராதிகா மைக்கேல் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், "நீரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். மூன்றாம் உலகப்போர் வருமானால் தண்ணீருக்காக தான் வரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மழை வளத்தைப் பாதுகாக்க மரங்களை அதிகளவு வளர்க்க வேண்டும். நெகிழிப்பைகளை நாம் உபயோகப்படுத்தினால் நீரின் தன்மையும், மண்வளமும் அழிந்து போய் விடும்.

எதிர்காலத்தில் நிலத்தடிநீர் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என்றும், அதனால் மரங்களை நாம் வளர்ப்பதற்கு போதிய முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.  நிகழ்ச்சியில், பழனிவேலு குழுவினரின் சுற்றுச்சூழலை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறைத்தலைவர் முனைவர் எல்.பிரின்ஸ், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News