அதிக வாக்குகள் பெற்று தந்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தந்த அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.;
Update: 2024-06-13 05:28 GMT
நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு அறிவிப்புக்கு பிறகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகைக்கு வருகை தந்தார். அப்போது அதிமுக தொண்டர்களிடையே எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தார் அதற்குப் பிறகு அதிமுக நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடி நகர மற்றும் எடப்பாடி ஒன்றியம் கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர்களே சந்தித்து நன்றி தெரிவித்தார் இந்த சந்திப்பு எடப்பாடி பயணியர் மாளிகையில் நடைபெற்றது.