த.மா.கா., சார்பில் சமத்துவ பொங்கல்

சிறுகாவேரிபாக்கத்தில் த.மா.கா., சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.;

Update: 2024-01-16 05:07 GMT

 சிறுகாவேரிபாக்கத்தில் த.மா.கா., சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.  

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட த.மா.கா., சார்பில், பொங்கலை ஒட்டி, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கத்தில், கிராமிய திருவிழா, சமத்துவ பொங்கல் விழா மற்றும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நேற்று விமரிசையாக நடந்தன. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட த.மா.கா., தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதை தொடந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement

இதில், மாட்டு வண்டி பயணம், ஒயிலாட்டம், பொங்கலிடுதல், சிலம்பம், கபடி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. த.மா.கா., இளைஞர் அணி மாநில பொதுச் செயலர் சங்கர் வரவேற்றார். விழாவில், விஷார் ஊராட்சி தலைவர் கார்த்திக் குபேர், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி துணைத் தலைவர் அபிராமி உட்பட பலர் பங்கேற்றனர். காஞ்சி மாநகர த.மா.கா., தலைவர் சுகுமார் நன்றி கூறினார்."

Tags:    

Similar News