சாத்தான்குளத்தில் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

சாத்தான்குளத்தில் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2024-01-16 10:20 GMT

சமத்துவ பொங்கல் விழா 

சாத்தான்குளத்தில் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவா் ராஜபாண்டி தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, ஒன்றியப் பொருளாளா் ஆனந்த், மத்திய ஒன்றியச் செயலா் பொன்முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்து, கட்சிக் கிளை, சாா்பு நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகை, பெண் நிா்வாகிகளுக்கு சேலைகளை வழங்கினாா்.

Tags:    

Similar News