தனியார் பள்ளி வானங்கள் ஆய்வு

ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனங்களை ஆட்சியர் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-11 05:23 GMT

ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஈரோடு கிழக்கு ,மேற்கு,பெருந்துறை ஆகிய மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் தரம் குறித்து நடைபெற்ற வருடாந்திர சோதனையில் மாவட்ட ஆட்சியர் ராஜாகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களை சேர்ந்த 980 வாகனங்கள் பங்கேற்றன.இதில் கலந்து கொண்ட வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி ,தீ அணைப்பு உபகரணங்கள் ,முதலுதவி உபகரணங்கள் மற்றும் அவசர கால கதவுகள் வேலை செய்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்றது.மேலும் கலந்து கொண்ட பள்ளிகளை சேர்ந்த ஓட்டுநர்களுக்கும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன...

Tags:    

Similar News