காங்கேயத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

ஈரோடு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா நேற்று காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-24 02:06 GMT
ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 102 காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் இராஜகோபால் சங்கரா வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு அறையை திடீர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வில் காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறை, தபால் வாக்கு சம்பந்தப்பட்ட அலுவலகம் மேலும் வீரசோழபுரம்‌, ஊதியூர், தாயம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள்  என 8 இடங்களில் வாக்கு பதிவு செய்யும் மையம், வாக்கு பெட்டிகள் வைக்கும் அறைகள், அவற்றின் அடிப்படை வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், பொது முகவரி அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஊழியர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், காங்கேயம் வட்டாச்சியர்‌ சு. மயில்சாமி ஆகியோர் உடன்‌ இருந்தனர்.
Tags:    

Similar News