ஈரோடு பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிவிப்பு !
ஈரோடு பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் என அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு;
By : King 24x7 Angel
Update: 2024-03-20 05:38 GMT
அதிமுக
ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர். பாஜக மாநில ஓபிசி அணி தலைவராக இருந்த அசோக்குமார், அண்ணாமலை உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எடப்பாடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர். இவர் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார். ஆற்றல் அசோக்குமார் பிறப்பு 8 5, 1970 புதுப்பாளையம் கிராமம்,கொடுமுடி தாலுகா,ஈரோடு மாவட்டம் பெற்றோர் பேராசிரியர் திரு ஆர்.ஆறுமுகம் பேராசிரியர் திருமதி சௌந்தரம்.கே.எஸ் EX MP (1991-1996)இவருக்கு கருணாம்ப என்ற மனைவியும் அஷ்வின் குமார் மற்றும் நிதின் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.