சோதனை நேரத்திலும் கட்சியினரை அரவணைப்பதில் வல்லவர் எ.வ.வேலு - திமுக மா.செ

Update: 2023-11-06 07:30 GMT
 கையெழுத்து இயக்கம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞர் அணி, மாணவர்அணி, மருத்துவர் அணி இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதற்காக கையெழுத்து எவ்வாறு வாங்க வேண்டும்.ஒவ்வொறு தொகுதிக்கு இலக்கு என்ன என்பது குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்க தொடக்க விழா நிகழ்ச்சி வந்தவாசியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு எம். எல் ஏ எஸ்.அம்பேத்குமார் தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் என்.நரேஷ் குமார், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் இ.எஸ்.டி. கார்த்திக், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், தெள்ளார் ஒன்றிய செயலாளர் டி.ராதா. நகராட்சி தலைவர் எச். ஜலால், துணை தலைவர் க.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஏ.தயாளன் வரவேற்றார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணி வேந்தன் கலந்துகொண்டு. பேசியதாவது:கட்சியின் தலைமையிடும் கட்டளையை செய்து முடிப்பதில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் இருக்கும். அதற்கு காரணம் நமது பொதுப் பணி துறை அமைச்சர் எ.வ.வேலு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் முதல்வரால் பாராட்டபடும் அமைச்சராக உள்ளார். இதனை பொருத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு தனது வருமான வரி துறையை கொண்டு சோதனை நடத்தியது.அப்போது எல்லோரும் கலக்கத்தில் இருப்பார்கள்.ஆனால் நமது அமைச்சர் வடக்கு மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ஜெய ராணி ரவியின் தயார் மறைவிற்கு சென்று வந்தாயா என கேட்டு, சோதனை காலத்திலும் கட்சியினரை அரவணைப்பதில் வல்லவர் என காட்டியுள்ளார். அவருக்கு நாம் பக்கபலமாக இருக்க நமக்கு இடப்பட்ட இலக்கை காட்டிலும் அதிகமாக கையெழுத்து பெற வேண்டும். மாணவர்களும், பொதுமக்களும் கையெழுத்து இடுவதற்கு தயாராக உள்ளனர். இதனை பின்பற்றி சேலம் இளைஞர் அணி மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் பெற பணியாற்றவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புசார தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.மணிகண்டன், துணை தலைவர் ஆர்.பாரி, நகர அவை தலைவர் ஏ.நவாப்ஜான், நகர பொருளாளர் ஏ.ஆர். ராஜாபாஷா, நகராட்சி கவுன்சிலர்கள் கே.நாகூர் மீரான், எம்.கிஷோர்குமார், ஆர் அன்பரசு, எஸ். நூர்முகமது. கு.சரவணமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர், முடிவில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் எச்.மதன் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News